ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3,750 போனஸ்


ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3,750 போனஸ்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3,750 போனஸ் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3,750 போனஸ் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

போராட்ட அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ரூ.3,750 போனஸ்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், மின்சார துறை அமைச்சர், மேயர் ஆகியோரின் முயற்சியால் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் ரூ.3,750 போனஸ் தொகை வழங்கப்படும்.

இதன் மூலம் 4750 பேர் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story