108 ஆம்புலன்சு சேவையால் 37,562 பேர் பயன்


108 ஆம்புலன்சு சேவையால் 37,562 பேர் பயன்
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 21 Jan 2023 9:06 AM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்சு சேவையால் 37,562 பேர் பயன் 96 கர்ப்பிணிகளுக்கு வாகனத்திலேயே பிரசவம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி-

கள்ளக்குறிச்சி மாவட்ட 108 ஆம்புலன்சு மேலாளர் அறிவுக்கரசு கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்சு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வாகனங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கானவை. 100-க்கு மேற்பட்ட டிரைவர்கள் மற்றும்மருத்துவ உதவியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நோயாளி இருக்கும் இடத்துக்கு சராசரி 14 நிமிடங்களில் 108 ஆம்புலன்சு செல்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 3,152 பேர், பிப்ரவரி-2,807, மார்ச்-2,777, ஏப்ரல்-2,837, மே-3,124, ஜூன்-2,894, ஜூலை-3,009, ஆகஸ்டு-3,255, செப்டம்பர்-3,664, அக்டோபர்-3,438, நவம்பர்-3,309, டிசம்பர்-3,296 என மொத்தம் 37 ஆயிரத்து 562 பேர் பயன் அடைந்துள்ளனர். இதில் சாலை விபத்தில் 6,451 பேர், கர்ப்பிணிகள் 14,271 பேர், பயனடைந்துள்ளனர். 96 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சுக்குள்ளேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சேவையை விட 2022-ம் ஆண்டில் 108 ஆம்புலன்சு மூலம் 4,492 பேர் கூடுதலாக பயன் அடைந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 33 ஆயிரத்து 70 பேர் ஆம்புலன்சு சேவையால் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story