ரெயில்வே ஊழியரிடம் ரூ.38 லட்சம் மோசடி
ரெயில்வே ஊழியரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
மத்திகிரி:-
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). தென்னக ெரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஓசூரில் பணியாற்றியுள்ளார். அப்போது தன்னுடன் பணிபுரியும் நண்பர்களான கண்ணன், ஜெகன், சண்முக மூர்த்தி, முத்துக்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஒரு ஏக்கர் நிலம் வாங்குவதற்காக மத்திகிரி, நவதி கிராமத்தை சேர்ந்த தென்னக ெரயில்வேயில் டெக்னீசியனாக பணிபுரிந்த சீனிவாசன் (45) என்பவரிடம் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி ரூ.43 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சீனிவாசன் நிலத்தை வாங்கி கொடுக்கவில்லை. தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்ட செந்தில்குமார் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் சீனிவாசன் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.