150 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


150 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

150 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகப்பட்டினம்

பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 150 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

மக்கள் நேர்காணல் முகாம்

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள், உதவிகளை பெற அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள மக்களை மாவட்ட கலெக்டர் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியே மக்கள் நேர்காணல் முகாமாகும். இதுபோன்ற

அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் இம்முகாம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு அறிவிக்கும் எண்ணற்ற திட்டங்களை சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். அப்படி சென்றடைந்தால் அத்திட்டம் வெற்றிபெற்றது என அர்த்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக 150 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், ஊராட்சிமன்ற தலைவர்கள் சத்தியகலா, தேவி, தமிழரசி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story