385 அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் திட்டம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்
385 அரசு பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
385 அரசு பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மிளிரும் பள்ளி திட்டம்
பள்ளிக்கல்வி துறை சார்பில் மாணவர்களின் நலன் கருதி எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி தூய்மை, வளாக தூய்மை, மரக்கன்று நடுதல் மற்றும் பராமரித்தல், காய்கறி தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல், கழிவறை சுத்தம், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் தொடக்க விழா சிவகங்கையில் உள்ள 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையிலும் முதன்மைகல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) முத்துச்சாமி வரவேற்று பேசினார்.
385 பள்ளிகள்
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பேசும் போது, இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 385 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி அளவிலான குழு மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய துணைக்குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு. ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்தின்கீழ் பள்ளிகளில் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும். இதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு செய்து விருது வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சக்திவேல், மாவட்ட உதவி திட்ட அலுவலர். பீட்டார்லெமாயூ, சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சம்பத்குமார், வனச்சரகர் பார்த்தீ்பன், சிவகங்கை வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட சூற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேரகன் மற்றும் சகாய பிரிட்டோ, சிவகங்கை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரூபாராணி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் சாந்தபிரபா நன்றி கூறினார்.