3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை


3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
x

குலசேகரம் அருகே 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

குலசேகரம் அருகே 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.

3-ம் வகுப்பு மாணவி

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். இவரது மகளுக்கு 8 வயதில் ஒரு மகள் உண்டு. அந்த சிறுமி தற்போது 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று மாணவியின் வீட்டுக்கு முதியவர் வந்தார். அத்துடன் அந்த சிறுமியை அழைத்து பாசமழை பொழிந்து கொஞ்சி மகிழ்ந்தார். அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த மாணவியின் தாயார் இரவில் சிறுமியை தனது தந்தையுடன் தனியாக தூங்க வைத்தார்.

இரவில் முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். அப்போது கண்விழித்த சிறுமியின் தாயார் தனது தந்தை மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தாயார் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து கூடினர்.

கைது

தொடர்ந்து விசாரித்த போது சிறுமி ஏற்கனவே தாத்தாவின் வீட்டுக்கு செல்லும் போதும் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும், அதை யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று மிரட்டி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமியின் தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story