பேக்கரி ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
பொள்ளாச்சியில் பேக்கரி ஊழியரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை சேர்ந்தவர் சபரி. இவர் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் ராஜாமில் ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சபரி மீது லேசாக உரசியப்படி சென்றதாக தெரிகிறது. இதுதொடர்பாக கேட்டதற்கு, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேருடன், அவர்களது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து சபரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சபரி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோட்டூர் ரோடு நேரு நகர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 21), நவாஸ் (21), மணி (24), நாகமணி (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.