கொக்கு வேட்டையாடிய 4 பேர் கைது


கொக்கு வேட்டையாடிய 4 பேர் கைது
x

கொக்கு வேட்டையாடிய 4 பேர் கைது

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் நித்திய கல்யானி தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே கொடிக்குளம் கண்மாயில் வலைவிரித்து இருந்ததை கண்டு அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கொக்குகளை வேட்டையாட வலையை விரித்து வைத்திருந்தது தெரிந்தது. வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதில் ராமநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்த மாரி (வயது25) என்பவர் மட்டும் பிடிபட்டார். இதனை தொடர்ந்து மாரியிடம் இருந்த 2 வெண் கொக்குகள் மோட்டார் சைக்கிள், ஆட்டோ வலைகள் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 2 கொக்குகளில் ஒரு கொக்கு காயமடைந்து இறந்து விட்டது. மற்றொரு கொக்கினை வனத்துறையினர் பறக்கவிட்டனர். இதனை தொடர்ந்து மாரியிடம் நடத்திய விசாரணையில், தப்பி ஓடியவர்கள் வீராச்சாமி (29), முனீஸ்வரன் (23), மணி (27) என்பது தெரியவந்தது. இவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். தடைசெய்யப்பட்ட கொக்குகளை வலை வைத்து பிடித்ததற்காக அவர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story