சந்தன மரங்களை வெட்டிய 4 பேர் கைது


சந்தன மரங்களை வெட்டிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2022 1:00 AM IST (Updated: 15 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சந்தனமரங்களை வெட்டி 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகம் சந்திரன் ஏரி சரக பகுதியில் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ராயக்கோட்டை அருகே போடம்பட்டி கிராமத்தை சேர்ந்த குப்புராஜி (வயது 25), சந்திரன் (40), மாது (27), சாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (22) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையில் 16 கிலோ சந்தன மர கட்டைகள் இருந்தன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தன மரங்களை வெட்டி சாக்கு மூட்டையில் எடுத்து செல்வது தெரிந்தது. இதனால் அவர்களை கைது செய்த வனத்துறையினர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி முன் ஆஜர்படுத்தி தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


Related Tags :
Next Story