வாலிபரை வெட்டிய 4 பேர் கைது


வாலிபரை வெட்டிய 4 பேர் கைது
x

சேரன்மாதேவியில் வாலிபரை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

முக்கூடல் அருகே அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சுடலைமுத்து ராஜா (வயது 27). இவர் சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மாரியப்பன் மகன் கார்த்திக் (18) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வந்த மர்ம நபர்கள் திடீரென கடையை சூறையாடி, பயங்கர ஆயுதத்தால் கார்த்திக்கின் கை மற்றும் கால்களில் வெட்டினர். இதனை தடுக்கச் சென்ற சுடலை முத்துராஜா மீதும் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல் காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சேரன்மாதேவி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வகுமார் (22), சக்திவேல் மகன் தளவாய் கண்ணன் (26), பாலசுப்பிரமணியன் மகன் வேல்முருகன் (34), கீழச்செவலைச் சேர்ந்த சங்கர் மகன் பேச்சிமுத்து (21) ஆகிய நான்கு பேரை கைது செய்தார்.


Next Story