பக்தர்களிடம் பணம் பறித்த 4 பேர் கைது


பக்தர்களிடம் பணம் பறித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் பகுதியில் பக்தர்களிடம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற அமாவாசை விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி பார்வதி(வயது 32) என்பவரிடம் மர்ம நபர் திடீரென மணிபர்சை பறித்துக் கொண்டு ஓடினார். உடனே பார்வதி கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் மர்மநபரை துரத்திப்பிடித்து மேல்மலையனூர் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ராணிப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அன்பழகன் (32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.380-ஐ பறிமுதல் செய்தனர்.

இதே போல் மேல்மலையனூர் அருகே உள்ள ஏம்பலம் கிராமத்தை சேர்ந்த தனபால் மகன் பச்சையப்பன் அங்குள்ள கங்கை அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது அவரை மிரட்டி பணம் பறித்துக்கொண்டு ஓடிய திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமம் ஹசேன்(49), தள்ளிகொண்டா கிராமம் சந்தோஷ்குமார்(41), கிடங்கல் கிராமம் விஜயகுமார் மகன் அப்பு என்கிற ஆகாஷ் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story