சூதாடிய 4 பேர் கைது


சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2023 10:45 PM GMT (Updated: 25 Sep 2023 10:45 PM GMT)

தேவாரம் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேவாரம் அருகே டி.மேட்டுப்பட்டியில் இருந்து ஓவுலாபுரம் செல்லும் சாலையில் தேவாரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து சூதாடியதாக தேவாரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 49), பல்லவராயன்பட்டியை சேர்ந்த அழகர் (55), மேட்டுப்பட்டியை சேர்ந்த ஸ்டாலின் (45), டி.சிந்தலைச்சேரியை சேர்ந்த தினேஷ் (34) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.600 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story