பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x

சூதாடிய 4 பேர் கைது

திருநெல்வேலி

நெல்லை:

சிவந்திபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சிவந்திபட்டியை அடுத்த ஆலங்குளம் சுடலைகோவில் அருகே பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சூதாடிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சிவந்திபட்டியை சேர்த்த பரமசிவன் (வயது 33), கோபால் (43), கருப்பசாமி (52), ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரையும் கைது செய்தனர்.


Next Story