பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கோயம்புத்தூர்
துடியலூர்
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் நாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடியதாக விக்னேஷ் (வயது 28), மணிகண்டன் (32), ராஜா (30), சக்தி (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2400 பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story