முந்திரி தோப்பில் கஞ்சா விற்ற 4 பேர் கைது


முந்திரி தோப்பில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
x

ஆண்டிமடம் அருகே முந்திரி தோப்பில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சூரக்குழி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 19), ராஜகுரு (19), சந்திரன் (24), ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 கிராம் எடை கொண்ட 8 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story