அடிதடி வழக்கில் 4 பேர் கைது
வெண்ணந்தூர் பகுதியில் அடிதடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெண்ணந்தூர்:-
வெண்ணந்தூரை அடுத்த மின்னக்கல் அருகே வடுகபாளையம் பகுதியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சப்பையாபுரம் கல்யாண மண்டபம் பகுதியை சேர்ந்த அஜித் (வயது 25) என்பவருக்கும், வடுகம்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (25) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இதற்கிடையே சக்திவேல், அவருடைய நண்பர்கள் பெரியசாமி, ராஜேஷ்குமார், சபரி ஆகியோர் அஜித் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது அஜித், அவருடைய நண்பர் ஹரிகரன் ஆகியோரை தாக்கியதாகவும் தெரிகிறது. காயம் அடைந்த அஜித், ஹரிகரன் இருவரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், பெரியசாமி, சபரி, ராஜேஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.