4 மூடை ரேஷன் அரிசி ஆட்டோவுடன் பறிமுதல்
விருதுநகரில் 4 மூடை ரேஷன் அரிசிவுடன் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுக்குறித்து இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ரகசிய தகவலின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் கம்மாபட்டி சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த ஆட்டோவில் தலா 40 கிலோ கொண்ட 4 மூடைகளில் 160 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ஆட்டோவுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஆட்டோவில் இருந்தஅரிசி உரிமையாளர் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 41) மற்றும் ஆட்டோ டிரைவர்ஆராய்ச்சி பட்டியை சேர்ந்த தமிழரசன் (22 )ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story