4 கோழிகள் சாவு; உணவில் விஷம் கலந்து வைக்கப்பட்டதாக புகார்


4 கோழிகள் சாவு; உணவில் விஷம் கலந்து வைக்கப்பட்டதாக புகார்
x

4 கோழிகள் சாவு; உணவில் விஷம் கலந்து வைக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சி அருகே உள்ள பிடாரபட்டியை சேர்ந்தவர் துரைசாமி(வயது 58). விவசாயியான இவர் கோழிகளை வளர்த்து வந்தார். இவரது நிலத்திற்கு அருகே உள்ள மற்றொரு நிலத்திற்கு கோழிகள் வராமல் இருக்க, உணவில் விஷம் கலந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துரைசாமி வளர்த்து வந்த 4 கோழிகள் திடீரென ஆங்காங்கே செத்து கிடந்தன. மேலும் சில கோழிகளை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசில் துரைசாமி புகார் கொடுத்தார். அதில், கோழிகளுக்கு விஷம் கலந்து வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story