மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் சாவு


மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் சாவு
x

மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் செத்தன.

திருச்சி

சமயபுரம்:

சிறுகனூர் அருகே உள்ள குமுளூர் வடக்கு தெருவை சேர்ந்த பெரியண்ணனின் மகன் ராஜீவ்காந்தி(வயது 34). விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கமாக மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச்சென்று விட்டு, மாலையில் அங்குள்ள கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்திருப்பார். இதேபோல் நேற்றும் மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் சென்ற உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில், திடீரென ஏற்பட்ட மின் கசிவால் ராஜீவ்காந்திக்கு சொந்தமான மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 4 மாடுகள் செத்தன.

இதேபோல் அதே ஊரை சேர்ந்த பாலமுருகன்(வயது 35) என்பவரது மாட்டு கொட்டகை மற்றும் வைக்கோல் போர் ஆகியவையும் மின்கசிவின் காரணமாக தீப்பற்றி எரிந்து நாசமாயின. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைத்தனர். இது குறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story