ரூ.4 கோடியில் நுகர் பொருள் வாணிப கிடங்கு


ரூ.4 கோடியில் நுகர் பொருள் வாணிப கிடங்கு
x

ரூ.4 கோடியில் நுகர் பொருள் வாணிப கிடங்கு அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.4 கோடியே 2 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் சுமார் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு அமைப்பதற்கான பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு தாலுகா பக்காலப் பல்லி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமலு விஜயன் எம்.எல்.ஏ., சப்- கலெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினர்.

நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், தமிழ்நாடு நுகர்பொருள் கண்காணிப்பாளர் சற்குணம், மண்டல துணை தாசில்தார் பலராமன், உதவி பொறியாளர் பூவரசன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் டேவிட், சின்னதாமல் செருவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story