இலங்கையில் இருந்து மேலும் 4 பேர் அகதிகளாக தமிழகம் வருகை - நடுக்கடலில் தவித்தவர்களை மீட்ட கடலோர காவல் படை...!


இலங்கையில் இருந்து மேலும் 4 பேர் அகதிகளாக தமிழகம் வருகை - நடுக்கடலில் தவித்தவர்களை மீட்ட கடலோர காவல் படை...!
x

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 4-வது மணல் திட்டில் தவித்த இலங்கை தமிழர்களை கடலோர காவல் படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

ராமேஸ்வரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் தற்போது வரை ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடிக்கு 90 பேர் அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகில் வந்த இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 4-வது மணல் திட்டில் இறக்கி விட்டுவிட்டு படகு திரும்பி சென்று உள்ளது.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல் படையினர் நடுக்கடலில் தவித்து கொண்டிருந்த ஒரு குழந்தை உட்பட 4 பேரை மீட்டு தனுஷ்கோடி அழைத்து வந்தனர்.

பின்னர், அவர்களை கடலோ போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். தற்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story