பென்னாகரம் வனப்பகுதியில் மான் கறி சமைத்த 4 பேர் கைது
தர்மபுரி
பென்னாகரம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கலப்பம்பாடி காப்புக்காட்டில் 4 பேர் அமர்ந்து கறி சமைத்து கொண்டு இருந்தனர் அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்கள் தாளப்பள்ளம் பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 61), நல்லமுத்து (53), முத்துசாமி (51) பூங்கொடி (38) என்பதும், இறந்து கிடந்த மானை கறி சமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மான் கறியை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்தனர். வனப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story