வக்கீல் கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது
வக்கீல் கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்
தாமரைக்குளம்:
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் சாமிநாதன். சென்னை உயர்நீதிமன்ற வக்கீலான இவர் கடந்த 7-ந் தேதி அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நடைபெற்ற தனது தங்கையின் திருமணத்திற்கு வந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில், இதில் தொடர்புடைய 6 பேர் நேற்று திருவையாறு கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் இளையராஜா என்பவரின் மனைவி ரெஜீனா, உறவினர்கள் கும்பகோணத்தை சேர்ந்த செல்வகுமார்(வயது 41), கும்பகோணம் திருநாரையூரை சேர்ந்த செல்வம், மோகன்தாஸ் மகன் நவீன்குமார், ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அரியலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் அறிவு முன்பு ஆஜர்படுத்தினர். மேலும் இளையராஜா உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story