மாநகராட்சி டிரைவரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது


மாநகராட்சி டிரைவரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
x

மாநகராட்சி டிரைவரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரத்தில் உள்ள அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப்(வயது 29). இவர் திருச்சி மாநகராட்சியில் சுகாதாரத்துறை வாகன டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மழையடிவாரம் அந்தோணியார் கோவில் தேர் திருவிழாவின்போது ஜோசப்புக்கும், அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார்(20), ஜெயசூர்யா(24) மற்றும் முறையே 15, 17 வயதுடைய 2 சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் 4 பேரும் சேர்ந்து ஜோசப்பை கட்டையால் தாக்கியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டினர். இது குறித்து ஜோசப் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து சரவணகுமார், ஜெயசூர்யா மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேரையும் கைது செய்தனர்.


Next Story