கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது


கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
x

வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செல்போன் பறிப்பு

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் பொள்ளாச்சி பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் 4 பேர் கொண்ட கும்பல் அருண்குமாரை ஆர்.பொன்னாபுரம் வாய்க்கால் மேடு பகுதிக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர் அவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு உள்ளனர். ஆனால் அருண்குமாரிடம் பணம் இல்லாததால், அந்த கும்பல் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடியது.

இதற்கிடையே அருண்குமார், தப்பி ஓடிய கும்பல் வைத்திருந்த பேக்கை பறித்துக்கொண்டார். இதுதொடர்பாக பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் அருண்குமார் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களிடம் இருந்து கிடைத்த பேக்கை போலீசார் திறந்து பார்த்த போது, உள்ளே இருந்த நோட்டு புத்தகத்தில் முகவரி இருந்தது.

4 பேர் கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) மற்றும் 17 வயதுடைய தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது. மேலும் ஆ.சங்கம்பாளையத்தில் இருந்து ஆர்.பொன்னாபுரம் செல்லும் சாலையில் அருண்குமார் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரும், அருண்குமாரிடம் மது வாங்கி தருவதாக கூறி ஆர்.பொன்னாபுரம் வாய்க்கால் மேட்டிற்கு அழைத்து சென்று உள்ளனர். பின்னர் ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த சரவணக்குமார், மணிகண்டன் ஆகியோரை வரவழைத்து அருண்குமாரிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றதும், செலவுக்கு பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story