கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 3½ ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை விதித்து அருப்புக்கோட்டை ேகார்ட்டு உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டை,
கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை விதித்து அருப்புக்கோட்டை ேகார்ட்டு உத்தரவிட்டது.
கொலை முயற்சி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் கட்டனூர் பள்ளப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த மணவாளன் என்பவரை கடந்த 16.7.2012-ந் தேதியன்று பழனியம்மாள், பாலமுருகன், சத்யமூர்த்தி, மாரிமுத்து மற்றும் கண்ணன் ஆகியோர் கொலை செய்ய முயன்றதாக கட்டனூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்கு அருப்புக்கோட்டை சார்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பழனியம்மாள் உயிரிழந்தார்.
3½ ஆண்டு சிறை
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ராம்குமார் ஆஜரானார்.
இ்ந்த வழக்கை சார்பு நீதிபதி ராமலிங்கம் விசாரித்து பாலமுருகன் உள்பட 4 பேருக்கு தலா 3½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.