வாலிபரின் மர்ம உறுப்பை அறுத்த 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
வாலிபரின் மர்ம உறுப்பை அறுத்த 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து துறையூர்் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி
வாலிபரின் மர்ம உறுப்பை அறுத்த 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து துறையூர்் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
முன்விரோதம்
துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 33). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி, சூர்யா, ரகுநாத், பாலா ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கீரம்பூர் கடை தெருவில் இருந்த தினேஷ் குமாரை 4 பேரும் சேர்ந்து தாக்கியதோடு மர்ம உறுப்பை பிளேடால் அறுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையானது துறையூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
3 ஆண்டு சிறை
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி நர்மதா ராணி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story