மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சாவித்திரி (வயது 50) என்பவரும், அதே பகுதியில் பாலச்சந்திரன் (56) என்பவரும், மரவாபாளையம் டாஸ்மாக் பின்புறம் உள்ள கோரைக்காட்டில் அதே பகுதியை சேர்ந்த மணி (63) என்பவரும், அய்யம்பாளையம் வாய்க்கால் பாலம் அருகே தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த அருண்குமார் (45) ஆகிய 4 பேரும் மது விற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 120 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story