மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

உப்பிலியபுரம்:

குடியரசு தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் உப்பிலியபுரம் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக வந்த தகவலின்பேரில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒக்கரையை சேர்ந்த வீரமணி(65), பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த முருகேசன்(56), வைரப்பெருமாள்பட்டியை சேர்ந்த மணி(56), கொப்பம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(47) ஆகிய 4 பேர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த உப்பிலியபுரம் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.


Next Story