சாராயம் விற்ற 4 பேர் கைது


சாராயம் விற்ற 4 பேர் கைது
x

சாராயம் விற்ற 4 பேர் கைது செய்ய்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 57) என்பவர் ஊராங்காணி ஏரிக்கரை அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சாராயம் விற்றதாக மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்தமலை (42), தும்பை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (59), கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் (65) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story