தொழிற்சாலையில் இரும்பு கம்பிகள் திருடிய 4 பேர் கைது


தொழிற்சாலையில் இரும்பு கம்பிகள் திருடிய 4 பேர் கைது
x

தொழிற்சாலையில் இரும்பு கம்பிகள் திருடிய 4 பேர் கைது

சேலம்

கருப்பூர்:

சேலம் கருப்பூர் மகளிர் தொழில் பூங்காவில் சேலம் குரங்குசாவடி பகுதியை சேர்ந்த சக்தி (வயது 39) என்பவர் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் 200 கிலோ இரும்பு கம்பிகள், 50 கிலோ பழைய இரும்பு கம்பிகள், 2 சைக்கிள் ஆகியவை திருட்டு போனது.இதுகுறித்து சக்தி கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கருப்பூர் இன்ஸ்பெக்டர் மனோன்மணி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில் அவர்கள் இரும்பு கம்பிகள் திருடியதை ஒப்புக் கொண்டனர். மேலும் விசாரித்ததில் அவர்கள் கருப்பூர் பகுதியை சேர்ந்த சந்துரு என்ற முகேஷ் (வயது 24) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள், 18 வயதில் ஒரு சிறுவன் என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story