திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள பி.கே.அகரம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக சரக்கு வாகனத்தில் வந்த திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது34), அறிவழகன் மனைவி சசி (29), செல்வம் மனைவி கருப்பாயி (34), அசோக் மனைவி தமிழரசி (34) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பி.கே. அகரத்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனத்தில் திருட முயற்சி செய்தபோது அங்கிருந்தவர்கள் அவர்களை துரத்தியதால் தப்பி ஓடி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 4 பேரையும் கைது செய்த போலீசார் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story