ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சொந்த ஊர் வந்தனர்


ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சொந்த ஊர் வந்தனர்
x

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சொந்த ஊர் வந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 20-ந்தேதி அன்று ஒரு விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற 6 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் கடந்த 4-ந்தேதி அன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரில் 4 பேர் மட்டும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து வாகனம் மூலம் நேற்று ராமேசுவரம் வந்து சேர்ந்தனர். மீதமுள்ள 2 மீனவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக இலங்கையிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் .குணமடைந்த பின்னர் விரைவில் 2 பேரும் விமான மூலம் தமிழகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.


Related Tags :
Next Story