கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
x

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருவிதாங்கோடு, இலுப்பைவிளை பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் அதே பகுதியை ேசர்ந்த ஷிபான் செய்யதலி (வயது 21), முகமது ரியாஸ் (22), பயஸ் அகமது (21), இம்ரான் (33) என்பதும், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.


Next Story