தொலைபேசி ஒயர்கள் திருடிய 4 வாலிபர்கள் கைது


தொலைபேசி ஒயர்கள் திருடிய 4 வாலிபர்கள் கைது
x

தொலைபேசி ஒயர்கள் திருடிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

செங்கம்

தொலைபேசி ஒயர்கள் திருடிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

செங்கம் அருகே உள்ள சுண்டாக்காபாளையம் பகுதியில் தனியார் தொலைபேசி நிறுவனத்தின் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு தொலைபேசி வயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தன்று அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைபேசி ஒயர்களை காணவில்லை என தனியார் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து செங்கம் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கொட்டகுளம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 26), மோகன் (27), ரோடுகரியமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27), பெருமாள் (29) உள்ளிட்ட நாலு பேரை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதை தொடர்ந்து சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் 4 பேரையும் கைது செய்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள தொலைபேசி ஒயர்களை மீட்டனர்.

1 More update

Next Story