400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சோளிங்கர் அருகே பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ெரயில் நிலையம் அருகே சென்னை - மைசூரு செல்லும் ெரயிலில் கடத்துவதற்காக முட்புதரில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அரக்கோணம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹெமந்தகுமாா், ஏட்டு சுப்பிரமணி, போலீஸ்காரர் வீரேஷ்குமாா் ஆகியோர் சென்று 8 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை பாணாவரம் வருவாய் துறையினரிடம் ஒப்படைபத்தனர்.
Related Tags :
Next Story