ஆட்டோவில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஆட்டோவில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குளச்சல்,
ஆட்டோவில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி பறிமுதல்
குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு குளச்சல் குறும்பனையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரேஷன் அரிசி மூடைகளை 2 பேர் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனர். பிறகு போலீசாரை கண்டதும் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். ஆட்டோவை சோதனை செய்த போது அதில் பிளாஸ்டிக் பைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் ஆட்டோவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை போலீசார் குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.