4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு


4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 March 2024 7:27 AM IST (Updated: 14 March 2024 7:51 AM IST)
t-max-icont-min-icon

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வித் துறைகளின் கீழ் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட சில பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம், அறிவிப்புகளை வெளியிட்டு அதற்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமனம் செய்து வருகிறது.

அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Next Story