டேன்டீ தொழிலாளர்களுக்கு 409.83 தினக்கூலி கிடைக்க நடவடிக்கை


டேன்டீ தொழிலாளர்களுக்கு 409.83 தினக்கூலி கிடைக்க நடவடிக்கை
x

தனியார் தோட்ட நிறுவனங்களுக்கு இணையாக டேன்டீ தொழிலாளர்களுக்கு 409.83 தினக்கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்க தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது

கோயம்புத்தூர்


வால்பாறை

வால்பாறை தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தொழிற்சங்க தலைவர் கள், தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழி லாளர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகை ஒரே தவணையில் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பது.

இப்போது ரூ.350.97 தினக்கூலி பெற்று வரும் டேன்டீ அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் பெறுவது போல் தினக்கூலி ரூ.409.83 கிடைப்ப தற்கு நடவடிக்கை எடுப்பது.

அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதிக்குள் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தொழிற்சங்க தலைவர்கள் தலைமையில் வால்பாறை, நீலகிரி பகுதி டேன்டீ தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது,

வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் இரவு 7 மணிக்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்து உள்ளதையும், சுற்றுலா பயணிகளிடம் தேவையற்ற கூடுதல் கட்டணங்களை வசூல் செய்வதை வன்மையாக கண்டித்து வருகிற நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆழியாறு சோதனை சாவடியில் வால்பாறை பகுதியைச் சோ்ந்த பல்வேறு அமைப்பினர், வனத்துறையினரை கண்டித்து நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது தெரிவித்தார்.

கூட்டத்தில் கருப்பையா, வினோத்குமார், மோகன், கேசவமருகன், கல்யாணி, ஷாஜீ,எட்வர்டு, வர்க்கீஸ், உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story