மது விற்ற 41 பேர் கைது
மது விற்ற 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று அரசு மதுபான கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தது. இதனையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்படி சட்டவிரோத மதுவிற்பனையை கட்டுப்படுத்த வேண்டி துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் நேற்று மட்டும் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 41 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 385 மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story