மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 422 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 422 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 422 மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 422 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர் ஷ்ரவன்குமார், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, உதவி ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story