ஆசிரியர் வீட்டில் 44 பவுன் நகை கொள்ளை


ஆசிரியர் வீட்டில் 44 பவுன் நகை கொள்ளை
x

பொள்ளாச்சி அருகே ஆசிரியர் வீட்டில் 44 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆசிரியர் வீட்டில் 44 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரசு பள்ளி ஆசிரியர்

பொள்ளாச்சி அருகே கோவை ரோடு நஞ்சேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 45). இவர் பழனியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயசந்திரா (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சரவணக்குமாரின் சொந்த ஊரான பழனி அருகே தொப்பம்பட்டியில் நடந்த தனது மகள் சீர் நிகழ்ச்சிக்கு கடந்த 10-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.

இந்த நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக நேற்று இரவு பக்கத்து வீட்டில் வசிப்பவர் சரவணக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பழனியில் இருந்து சரவணக்குமார் நஞ்சேகவுண்டன்புதூரில் உள்ள வீட்டிற்கு விரைந்து வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

மேலும் பீரோவில் இருந்த 44 பவுன் நகை, ரூ.25 லட்சம் பணமும் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டில் இருந்த காவலாளியிடம் போலீசார் விசாரித்தனர். இதற்கிடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சரவணக்குமார் பழனிக்கு சென்றதை அறிந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்களை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story