திறனாய்வு தேர்வை 4,485 மாணவ-மாணவிகள் எழுதினர்


திறனாய்வு தேர்வை 4,485 மாணவ-மாணவிகள் எழுதினர்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் திறனாய்வு தேர்வை 4,485 மாணவ-மாணவிகள் எழுதினர்.

புதுக்கோட்டை

திறனாய்வு தேர்வு

அரசு பள்ளிகளில் மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இதில் முதல் தாள் தேர்வு காலையிலும், 2-ம் தாள் தேர்வு மதியத்திலும் நடைபெற்றது. இத்தேர்வை எழுத 4 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4 ஆயிரத்து 485 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 179 பேர் தேர்வு எழுதவரவில்லை. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு தலா ரூ.1,000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

அதிகாரிகள் ஆய்வு

மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தேர்வை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து உடன் இருந்தார்.


Next Story