45 இளநிலை உதவியாளர்கள் பணியில் சேர்ந்தனர்


45 இளநிலை உதவியாளர்கள் பணியில் சேர்ந்தனர்
x
தினத்தந்தி 1 Oct 2023 2:30 AM IST (Updated: 1 Oct 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் 45 இளநிலை உதவியாளர்கள் பணியில் சேர்ந்தனர்

கோயம்புத்தூர்

குரூப்-4 தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித் துறைக்கு 673 பேர்தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு 70 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.


கோவை மாவட்ட கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் நேற்று பணியில் சேர்வதற்காக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத் திற்கு வந்தனர்.

அங்கு அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப் பட்டு பணியிடங்களுக்கு செல்வதற்கான ஆணையை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார்

. 70 பேரில் நேற்று வரை 45 பேர் பணியில் சேர்ந்தனர். மற்றவர்கள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பணியில் சேர்வார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story