"ஜனாதிபதி ஆக போறேன், 4,809 கோடி கடன் வேணும்..!" ரிசர்வ் வங்கியை அலற விட்ட தமிழர்..!


ஜனாதிபதி ஆக போறேன், 4,809 கோடி கடன் வேணும்..! ரிசர்வ் வங்கியை அலற விட்ட தமிழர்..!
x

நாமக்கல்லை சேர்ந்த காந்தியவாதி ஜனாதிபதி தேர்தல் செலவுக்கு 4,809 கோடி கடன் கேட்டு சென்னை ரிசர்வ் வங்கியில் மனு அளித்துள்ளார்.

நாமக்கல்:

ஜனாதிபதி தேர்தல் செலவுக்கு 4,809 கோடி கடன் கேட்டு சென்னை ரிசர்வ் வங்கியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் மனு கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் இந்திய குடிமகனாக வசித்துவரும் நான் கடந்த 15.06.2022 அன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரடியாக இந்திய நாட்டின் 16-ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்காக அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நானும் 5 வது நபராக தமிழ்நாட்டிலிருந்து சென்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.

நான் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க குறைந்த பட்சம் 2405 வாக்குகள் மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநில, யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் வாக்குகள் தேவைப்படுகின்றன.

ஆகவே இந்த வாக்குகளை பெற வாக்காளர்களுக்கு தலா அதிக பட்சம் ஒரு நபருக்கு 1 கோடி வீதம் அன்பளிப்பு வழங்க வேண்டும். ஆனால் நான் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் பாரபட்சமில்லாமல் குறைந்த பட்சமாகவாவது தலா 1 கோடி வீதம் அன்பளிப்பாக வழங்கி வாக்குகளை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உள்ளேன்.

ஆகவே எனக்கு உடனடியாக ரூபாய் 4,809 கோடியை நமது சென்னை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் மானிய கடனாகவோ அல்லது தள்ளுபடி கடனாக வழங்க வேண்டும் வேண்டுமென மனு அளித்துள்ளேன்.

மேற்படி வங்கியில் இருந்து வழங்கப்படும் கடனுக்காக இந்த நாட்டின் ஜனாதிபதியாக 5 ஆண்டுகளுக்கும், மாதந்தோறும் குறைந்தபட்சம் ஊதியமாக வழங்கும் ரூபாய் 5 லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக பணியாற்றுவேன் என்றும்,

இந்த நாட்டின் குடியரசு தலைவராக பதிவியேற்ற 24 மணி நேரத்தில், மது மற்றும் போதை பொருட்கள் இல்லாத இந்தியா, லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத இந்தியாவாக மாற்றி விடுவேன் எனவும், அதற்காக இந்த முறை நான் கட்டாயம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் முயற்சி செய்து வருகிறேன்.

தங்களிடம் உறுதியாக இந்த உதவி தேவைப்படுவதால் நாட்டின் நலன் கருதி நாட்டுமக்களுக்கு ஒரு நல்ல முதல் குடிமகனாக முன் மாதிரியாக நான் இருந்து காட்ட மேற்படி ரூபாய் 4809 கோடியை கடனாக வழங்க வேண்டுமெனவும் ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story