பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய 5 பேர் கைது
பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி,
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தி, பொருட்களை எடுத்து சென்றது தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் மூலம் சங்கராபுரம் பங்களாதெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் துரைமணிகண்டன் (வயது23), பருவதம் மகன் ஜெயபாரத் (24), சங்கராபுரம் வள்ளலார் தெருவை சேர்ந்த ஜெகதீசன் மகன் யுவராஜ் (25), ஒகையூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சாமிதுரை (39), சின்னையன் மகன் அண்ணாமலை (29) ஆகிய 5 பேரை கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.