செஞ்சி அருகே அடுத்தடுத்து5 பஸ் கண்ணாடிகள் உடைப்புபா.ம.க. பிரமுகர் கைது


செஞ்சி அருகே அடுத்தடுத்து5 பஸ் கண்ணாடிகள் உடைப்புபா.ம.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே அடுத்தடுத்து 5 பஸ்கள் மீது பீர்பாட்டில்களை வீசி மர்மநபர்கள் கண்ணாடிகளை உடைத்தனர். இதுதொடர்பாக பா.ம.க. பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம்

செஞ்சி,

புதுச்சேரியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் செஞ்சி அடுத்த கலையூர் கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென தாங்கள் வைத்திருந்த காலி மதுபாட்டில்களை அரசு பஸ் மீது வீசிவிட்டு, தலைமறைவாகி விட்டனர். இதில் அரசு பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்து போனது. இந்த தாக்குதலில் பஸ டிரைவர் செந்தில்குமார் (வயது 41) என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அவ்வழியாக வந்த 2 அரசு பஸ்கள், ஒரு தனியார் பஸ் மற்றும் லாரி மீதும் மர்மநபர்கள் பீர்பாட்டில்களை வீசினர். இதில் பஸ்கள், லாரி கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இந்த சம்பவங்கள் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் விளைநிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வல்லம் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகரான அறிவழகன் (34) உள்ளிட்ட சிலர் பஸ் கண்ணாடிகளை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அறிவழகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story