மயிலாடுதுறை மாவட்டத்தில் 5-ந்தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் 5-ந்தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:16:12+05:30)

வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 5-ந்தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் தகவல்

மயிலாடுதுறை

வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுவிற்பனை இல்லாத நாளாக தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் மதுபான கடைகளையொட்டி உள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் 5-ந்தேதி வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு தினத்தில் தற்காலிகமாக மூடிவைக்கப்பட வேண்டும். மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மதுபான போக்குவரத்து ஏதும் செய்யக்கூடாது என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.


Next Story