முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு 5 மாவட்டங்களில் மட்டும் மார்ச் 4-ந்தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு


முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு 5 மாவட்டங்களில் மட்டும் மார்ச் 4-ந்தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு
x

5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 4-ந்தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

சென்னை,

மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 4-ந்தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், அன்றைய தினம், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

அன்றைய தினம் திங்கள்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதற்குப் பதிலாக 13-ந்தேதி விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story