படகு கவிழ்ந்ததால் தத்தளித்த 5 மீனவர்கள்


படகு கவிழ்ந்ததால் தத்தளித்த 5 மீனவர்கள்
x

அதிராம்பட்டினத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்தது. இதில் கடலில் தத்தளித்த 5 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்தது. இதில் கடலில் தத்தளித்த 5 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

படகு கவிழ்ந்தது

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்று, கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிராம்பட்டினம் காந்திநகரை சேர்ந்த காமாட்சி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் காமாட்சி (வயது58), சூர்யா(22), கலையரசன்(25), செல்வா(23), கலைமணி(22) ஆகிய 5 மீனவர்களும் காந்திநகர் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கடலில் பலத்த காற்றுடன் ராட்சத அலை எழுந்தது. இதில் கமாட்சியின் நாட்டுப்படகு படகு தலைகுப்புற கவிழ்ந்தது.

கடலில் தத்தளித்த மீனவர்கள்

இதில் 5 மீனவர்கள் செய்வது அறியாமல் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்த மீனவர்களையும், கவிழ்ந்த படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுபற்றி மீனவர்கள் கூறுகையில்

நேற்று காலையில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது எதிர்பாராதவிதமாக பலத்த காற்றுடன் ராட்சத அலை எழுந்ததால் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதனால் நாங்கள் கடலில் 3 மணிநேரமாக தத்தளித்துகொண்டிருந்தோம். அப்போது அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் தங்களையும், தங்களது படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர் என்றனர்.


Next Story